இருப்பிடம் :
காவிரியின் வடபால் சென்னை திருச்சி நெடு்ஞ்சாலையில் சிறுகனூருக்கு மேற்கில் ஸ்ரீ பிரம்மபூரீஸ்பரர் கோயிலில் உள்ள திருப்பட்டூர் கிராமத்துக்கும் எதுமலை கிராமத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது ஸ்ரீ காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேசர் மற்றும் ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயில்.
பெயர்க்காரணம் :
ஈச்சங்காடு எனவும் களரங்காடு எனவும் அழைக்கப்பட்ட இப்பகுதி ஏழுமலையிலிருந்து ஆதி வீரமரெட்டி மூலம் இங்கே எழுந்தருளியதால் எழுமலை என்றானது பின்னர் எதுமலை என்று மருவி அழைக்கப்படுகிறது.
கருப்பண்ணசாமியின் இதர பெயர்கள் :
கருப்பண்ணன், நல்லுசாமி, களரப்பன், நல்லான், முத்துக்கருப்பண்ணசாமி, வீரன் நல்லேந்திரன், எதுமலையான், மாயன், கருப்பையா, காளிகோபுரத்தான், நல்லய்யன்.
சிறப்புகள் :
அன்னை காமாட்சியும் ஏகாம்பர ஈசனும் ஒரே சன்னதியில் இருப்பது சிறப்பாகும்.
மகாசிவராத்திரியன்று நடைபெறும் காத்தவராயன் கதைப்பாட்டும் கழுவேற்ற நிகழ்ச்சியும் சிறப்பாகும்.
வடவேங்கடத்து வெங்கடேசன் இங்கே கருப்பண்ணனாய் எழுந்தருளி உள்ளான்.
சைவமும் வைணவமும் இங்கே சேர்ந்து வழிபடுவது சிறப்பான அம்சமாகும்.
ஸ்ரீசப்தகன்னியர், ஸ்ரீஆரியப்பூராசா, ஸ்ரீவீராடசன்யாசி, ஸ்ரீதேவராயன், ஸ்ரீமதுரைவீரன், ஸ்ரீகாத்தவராயன், முதலிய பரிவாரங்களுடன் மூர்க்க விநாயகர், அருள்தரும் திருமுருகன், வீரஆஞ்சநேயர், நாக தேவதை முதலியோரும் வீற்றிருப்பது சிறப்பாகும்.
சப்தகுரு ஸ்தலமாகவும் அமைந்துள்ளது.
|